நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாரா வழக்கில் வெளிப்படையான விசாரணை; யாரும் பாதுகாக்கப்பட மாட்டார்கள்: அன்வார்

கோத்தாபாரு:

ஷாரா வழக்கில் வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படும். இதில் யாரும் பாதுகாக்கப்பட மாட்டார்கள்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

ஷாரா கைரினா மகாதிர் வழக்கு விசாரணை எந்தவித சமரசமும் இல்லாமல் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும்.

இந்த வழக்கை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

ஆனால் அதை அரசியல் பொருளாக மாற்றி அவதூறுக்கு வழிவகுக்கும் எந்த ஊகங்களையும் உருவாக்க வேண்டாம் என்று அவர்  பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

13 வயது சிறுமியின் மரணத்தை ஒரு முக்கிய நபருடன் சிலர் தொடர்புபடுத்தியிருந்தாலும், விசாரணை இன்னும் வெளிப்படையாகவே நடத்தப்பட்டு வருகிறது.

அதை அரசு எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதில் எங்கள் அறிவுறுத்தல்கள் தெளிவாக உள்ளன.

எந்த சமரசமும் இல்லை. எல்லா மக்களும் பல வகையான கதைகளைச் சொல்கிறார்கள், 

ஆளுநரின் மகன், ஒரு அமைச்சரின் மகனுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகின்றன.

அவை அனைத்தும் ஆருடங்கள் தான். ஆனால் அவதூறு செய்ய வேண்டாம் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset