நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரின் 60 ஆவது ஆண்டு தேசிய தின அணிவகுப்பு: மக்கள் பரவசம்

சிங்கப்பூர்: 

தேசிய தின அணிவகுப்பு 2025இன் காட்சி அங்கம் சிங்கப்பூரர் என்ற அடையாளத்தை வலியுறுத்தும் வகையில் தேசிய கீதத்தின் வரிகளுக்குச் சிறப்பு சேர்த்தது.

39 கலைஞர்கள், 3,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் நேற்றிரவு சிங்கப்பூர் தீவு களை கட்டி இருந்தது.

பல்வேறு சாகசக் காட்சிகள் பார்வையாளர்களுக்கு உற்சாகமூட்டிப் பரவசத்தில் ஆழ்த்தின.

சிங்கப்பூரின் 60 ஆவது ஆண்டு பயணத்தைப் பின்னோக்கிப் பார்க்க ஒரு வாய்ப்பபாக நேற்றைய நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைந்திருந்தன.

துடிப்பாகத் தொடங்கிய நிகழ்ச்சியில் மனத்தை நெகிழவைத்த பல தருணங்களும் இடம்பெற்றன.

பொழுது சாய்ந்தவுடன் சார்லி லிம் (Charlie Lim), கிட் சான் (Kit Chan) இருவரின் குரல்களில் ஒலித்த "Here We Are" தேசிய தினப் பாடல் பார்வையாளர்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பியது.

அதைத் தொடர்ந்து நான்கு மொழிகளிலும் இடம்பெற்ற அங்கம் கண்ணுக்கும் செவிக்கும் விருந்தாக அமைந்தது.

சிறப்புத் தேவையுடையோரின் கைவண்ணத்தில் மலர்ந்த படைப்புகளும் நிகழ்ச்சியை அலங்கரித்தன.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset