நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீனாவின் பௌத்த ஆலயத்தில் புதிய விதிமுறைகள்: மடத்தைவிட்டு வெளியேறும் துறவிகள்

குவான்சாவ்:

சீனாவின் ஷாவோலின் (Shaolin Temple) பௌத்த ஆலயத்தில் புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டதால் 30 துறவிகள் வெளியேறியுள்ளனர்.

ஆலயத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்த ஷி யோங்சின் (Shi Yongxin) மீது குற்றச்சாட்டுகள் குவிந்ததால் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதையடுத்து 59 வயது ஷி யின்லே தலைவராகப் பொறுப்பேற்றார்.

துறவிகள் தடம் மாறிவிட்டதாகக் கூறிய ஷி யின்லே புதிய மாற்றங்களை அறிவித்திருக்கிறார்.

இனி துறவிகள் அதிகமான காய்கறிகளைச் சாப்பிடவேண்டும். வாரத்தில் ஒரு முறை மட்டும் Tofu சாப்பிடலாம்.

திரை நேரம் 30 நிமிடங்கள் மட்டுமே. அனுமதியோடு தொலைபேசியைப் பயன்படுத்தலாம்.

கேளிக்கை நடவடிக்கைகள் கிடையாது.

புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டபின் 30க்கும் மேலான துறவிகள் கோவிலிலிருந்து வெளியேறிவிட்டனர்.

இந்நிலையில் சமூக வலைத்தளம் சூடுபிடித்துவிட்டது!

இணையவாசிகள் புதிய விதிமுறையைத் தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்முறையுடன் ஒப்பிட்டு “Buddhist 996” என்று அழைக்கிறார்கள்.

ஆதாரம்: South China Morning Post

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset