செய்திகள் இந்தியா
தில்லியில் கனமழை: 100-க்கும் அதிகமான விமானங்கள் தாமதம்
புதுடெல்லி:
தில்லியில் பெய்து வரும் தொடர் கனமழையால், அம்மாநிலத்தில் 100-க்கும் அதிகமான விமானங்கள் தாமதமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மழை காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்டு சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி நகரில் பரவலாக மழை பதிவாகியுள்ளது. வெள்ளிக்கிழமை பின்னிரவு அங்கு மழை பொழிவு தொடங்கியது. நகரின் பல்வேறு இடங்களில் இந்த மழைப் பொழிவு விடிய விடிய தொடர்ந்தது. இதனால் அங்கு வெப்பம் தணிந்துள்ளது. மழை காரணமாக சாஸ்திரி பவன், ஆர்.கே.புரம், மோத்தி பாக், கித்வாய் நகர் பகுதியில் கனமழை பதிவானது. சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியுள்ளது.
இன்று (சனிக்கிழமை) ரக்ஷா பந்தன் கொண்டாடப்படும் நிலையில் மழை பதிவான காரணத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை அங்கு பாதிக்கப்பட்டுள்ளது. இன்று நாள் முழுவதும் மழைப் பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மிதமானது முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பொழிய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக டெல்லியின் மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் மழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விமானப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்களது விமான சேவை நிறுவனங்களை தொடர்பு கொண்டு விவரங்கள் பெறுமாறு டெல்லி விமான நிலையம் தெரிவித்துள்ளது.
டெல்லி மட்டுமின்றி இமாச்சல் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலத்துக்கும் இன்று கனமழை எச்சரிக்கை கொடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
அமெரிக்க விசா கிடைக்காததால் ஹைதராபாத் பெண் மருத்துவர் தற்கொலை
November 24, 2025, 3:08 pm
இந்தியத் தலைநகரில் மோசமான காற்று மாசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக வெடித்தது
November 22, 2025, 6:54 pm
