நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அவசரகால மருந்துகளுக்கு விலை உச்சவரம்பு நிர்ணயம்: இந்திய அரசு முடிவு

புதுடெல்லி: 

அவசர​கால பயன்​பாட்​டுக்​கான 4 மருந்​துகளுக்கு மத்​திய அரசு விலை உச்சவரம்பு நிர்​ண​யம் செய்​துள்​ளது. 

இது​போல் வலி நிவாரணி, நுண்​ணுயிர் எதிர்ப்பி உள்​ளிட்ட 37 மருந்​துகளுக்கு சில்​லறை விலை நிர்​ண​யம் செய்​துள்​ளது.

மூச்​சுத்​திணறல், இரு​மல், நாள்​பட்ட நுரையீரல் நோயால் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ஏற்​படும் மார்பு இறுக்​கம் போன்​றவற்றை தடுக்க பயன்​படுத்​தும் இப்​ராட்​ரோபி​யம் (Ipratropium) உள்​ளிட்ட மருந்​துகள் அவசர​கால பயன்​பாட்டு மருந்​துகளாக உள்​ளன. இவற்​றுக்​கான விலை உச்​சவரம்பு ஒரு மில்​லிக்கு ரூ.2.96 ஆக நிர்​ண​யிக்​கப்​பட்​டு உள்​ளது.
 
உயர் ரத்த அழுத்த அவசர சூழலில் ரத்த அழுத்​தத்தை விரை​வாக குறைக்​க​வும், அறுவை சிகிச்​சை​யின்​போது ரத்​தப்​போக்கை குறைக்​க​வும் கடுமை​யான இதய செயலிழப்பு நிகழ்​வு​களி​லும் ஊசி மருந்​தான சோடி​யம் நைட்​ரோபுரஸைடு (Sodium Nitroprusside) பயன்​படுத்​தப்​படு​கிறது. இதன் விலை உச்​சவரம்பு ஒரு மில்​லிக்கு ரூ.28.99 ஆக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

இது​போல் உயர் ரத்த அழுத்​தம் மற்​றும் நெஞ்சு வலி சிகிச்சை அளிக்​கப் பயன்​படுத்​தப்​படும் டில்​டி​யாசெம் (Diltiazem) ஒரு காப்​ஸ்​யூலுக்கு ரூ.26.77 ஆக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. 

உச்​சவரம்பு விலையை விட அதிக விலை​யில் (ஜிஎஸ்​டி​யுடன் சேர்த்​து) விற்​பனை செய்​யும் உற்​பத்​தி​யாளர்​கள் உடனடி​யாக தங்​கள் விலைகளை குறைக்க வேண்​டும் என்று தேசிய மருந்து விலை நிர்ணய ஆணை​யம் (என்​பிபிஏ) அறி​வித்​துள்​ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset