
செய்திகள் மலேசியா
2026 சிலாங்கூர் சுக்மாவில் சிலம்பம் நிலை நிறுத்தப்படும்: பாப்பாராயுடு அறிவிப்பு
ஷாஆலம்:
2026 சிலாங்கூர் சுக்மா விளையாட்டுப் போட்டியில் சிலம்பம் நிலை நிறுத்தப்படும்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு இதனை அறிவித்தார்.
அடுத்தாண்டு சுக்மா போட்டியில் சிலம்பம் நீக்கப்பட்ட விவகாரம் நாட்டில் சர்ச்சையானது.
இந்நிலையில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இந்த சிலம்ப விவகாரத்தை முன்வைக்கப்பட்டது.
அதே வேளையில் சமுதாயத்தின் அதிருப்தி, கோரிக்கைகளையும் எடுத்துக் கூறினேன்.
இதனைத் தொடர்ந்து அடுத்தாண்டு சுக்மாவில் சிலம்பத்தை இணைத்து கொள்ள, சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி ஒப்புதல் வழங்கினார்.
இதன் அடிப்படையில் அடுத்தாண்டு சுக்மா விளையாட்டுப் போட்டியில் சிலம்பம் நிலை நிறுத்தப்படும்.
அதே வேளையில் முவாதாய், பெ தோங் ஆகிய போட்டிகளும் சுக்மாவில் இணைக்கப்பட்டுள்ளது.
இப்போட்டிகளை சுக்மாவில் இணைத்து கொள்ள வாய்ப்பும் அனுமதியும் வழங்கிய மந்திரி புசாருக்கு நன்றி.
மேலும் நமது பாரம்பரியம் காக்கப்படுவதை ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற முறையில் நான் உறுதி செய்வேன்.
குறிப்பாக சமுதாயத்தின் குரல்கள், கோரிக்கைகளுக்கு மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று பாப்பாராயுடு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 8, 2025, 2:28 pm
மியான்மர் இராணுவ ஆட்சிக் குழு தேர்தல் திட்டங்களை தெளிவுபடுத்த வேண்டும்: முஹம்மத் ஹசான்
August 8, 2025, 2:27 pm
பிறந்த குழந்தையை வீசிய கல்லூரி மாணவிக்கு 10,000 ரிங்கிட் அபராதம்
August 8, 2025, 2:26 pm
சிலாங்கூர் மாநில சிறுவர்களுக்கான பாடும் திறன் போட்டி; ஆகஸ்ட் 24 பதிவுக்கான இறுதி நாள்: குணராஜ்
August 8, 2025, 12:00 pm
சிலாங்கூர் சுக்மாவில் சிலம்பம் இடம் பெறுவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் பேசுவேன்: கோபிந்த் சிங்
August 8, 2025, 10:11 am