நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய இஸ்லாமிய கலை அருங்காட்சியகத்தில்  "மைசூர் புலிகளின் கர்ஜனை கண்காட்சி: ஹைதர் அலி, திப்பு சுல்தானின் மரபு" கண்காட்சியை பிரதமர் அன்வார் தொடக்கி வைத்தார் 

கோலாலம்பூர்:

மலேசிய இஸ்லாமிய கலை அருங்காட்சியகத்தில் நடைபெற்ற "மைசூர் புலிகளின் கர்ஜனை கண்காட்சி: ஹைதர் அலி, திப்பு சுல்தானின் மரபு" என்ற கண்காட்சியின் தொடக்க விழாவில் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது அசிசாவும் நானும் கலந்து கொண்டார் 

இந்த கண்காட்சி, மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராளியான திப்பு சுல்தான், அவரது தந்தை ஹைதர் அலியின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகிறது என்று பிரதமர் கூறினார். 

பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் தங்களது ராஜதந்திரம், பொருளாதாரம், கலை மற்றும் இராணுவ தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற்றிருந்தார்கள். திப்பு சுல்தான் தான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக முதல் ஏவுகணை தொழிநுட்பத்தை பயன்படுத்தினார் என்பது வரலாற்றில் மறைக்க முடியாத சான்று.

May be an image of 3 people, dais and text

May be art of 5 people and text

முதல் முறையாக, 200 ஆண்டுகளுக்கு முன்பு மைசூரிலிருந்து கொண்டுவரப்பட்ட சில அசல் கலைப்பொருட்கள், மலேசிய இஸ்லாமிய கலை அருங்காட்சியகத்தின் கடின முயற்சியின் விளைவாக இப்போது மலேசியாவில் நிரந்தரமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

May be an image of 3 people

பன்மை சமூகத்தில் ஞானம், கொள்கை, சகிப்புத்தன்மை கொண்ட தலைமையின் அடையாளமாக இந்தியாவின் மைசூரில் திப்பு சுல்தானின் பாரம்பரியத்தைக் கண்டறிந்த அனுபவத்தையும் நான் பகிர்ந்து கொள்கிறேன் என்று பிரதமர் அன்வார் கூறினார். 

May be an image of 5 people

May be an image of 4 people and text that says "ALAYSIA"

இந்த வரலாற்றுப் பொக்கிஷங்களை எதிர்கால சந்ததியினரின் பார்வைக்கும் விருப்பத்திற்கும் கொண்டு வருவதில் வெற்றி பெற்றதற்காக அருங்காட்சியகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் கூறினார்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset