
செய்திகள் மலேசியா
சிலாங்கூர் சுக்மாவில் சிலம்பம் நீக்கப்பட்ட விவகாரத்திற்கு இன்று மாலை நல்ல பதில் கிடைக்கலாம்: குணராஜ்
செந்தோசா:
சிலாங்கூர் சுக்மாவில் சிலம்பம் நீக்கப்பட்ட விவகாரத்திற்கு இன்று மாலை நல்ல பதில் கிடைக்கலாம்.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் இந்த நம்பிக்கையை தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டு சுக்மா விளையாட்டுப் போட்டி சிலாங்கூரில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் இருந்து சிலம்பம் நீக்கப்பட்டுள்ளது.
இது சிலம்பப் போட்டியாளர்கள், பயிற்றுநர்கள், சிலம்பக் கழகங்கள் என அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக இப்போட்டிக்காக தயாராகி வரும் போட்டியாளர்களுக்கு பெரும் வேதனையை அளித்துள்ளது.
அதே வேளையில் சமுதாய தலைவர்கள் கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதன் அடிப்படையில் தான் சிலாங்கூர் மாநில விளையாட்டுப் பிரிவு ஆட்சிக் குழு உறுப்பினர் நஜ்வானிடம் பேசப்பட்டது.
மேலும் இவ்விவகாரத்தை சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி பார்வைக்கு கொண்டு செல்வதாக அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து இன்று மாலை அறிக்கை வெளியிடப்படும் எனவும் நஜ்வான் கூறினார்.
அவரின் கூற்றின் படி சுக்மா சிலம்பப் பிரச்சினைக்கு இன்று மாலை நல்ல பதில் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
எது எப்படி இருந்தாலும் சிலம்பம் நமது பாரம்பரிய விளையாட்டாகும். அதனால் இப்போட்டி நிச்சயம் சுக்மா போட்டியில் இடம் பெற வேண்டும்.
ஆகையால் இப்போட்டியை சுக்மாவில் சேர்க்கும் முயற்சிகள் தொடரும் என்று குணராஜ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 8, 2025, 6:09 pm
2026 சிலாங்கூர் சுக்மாவில் சிலம்பம் நிலை நிறுத்தப்படும்: பாப்பாராயுடு அறிவிப்பு
August 8, 2025, 2:28 pm
மியான்மர் இராணுவ ஆட்சிக் குழு தேர்தல் திட்டங்களை தெளிவுபடுத்த வேண்டும்: முஹம்மத் ஹசான்
August 8, 2025, 2:27 pm
பிறந்த குழந்தையை வீசிய கல்லூரி மாணவிக்கு 10,000 ரிங்கிட் அபராதம்
August 8, 2025, 2:26 pm
சிலாங்கூர் மாநில சிறுவர்களுக்கான பாடும் திறன் போட்டி; ஆகஸ்ட் 24 பதிவுக்கான இறுதி நாள்: குணராஜ்
August 8, 2025, 12:00 pm
சிலாங்கூர் சுக்மாவில் சிலம்பம் இடம் பெறுவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் பேசுவேன்: கோபிந்த் சிங்
August 8, 2025, 10:11 am