
செய்திகள் மலேசியா
சிலம்பம் விவகாரத்தில் உரிமைக்காக குரல் கொடுப்பதை இனப் பிரச்சினை என சித்தரிக்க வேண்டாம்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
கோலாலம்பூர்:
சிலம்பம் விவகாரத்தில் உரிமைக்காக குரல் கொடுப்பதை இனப் பிரச்சினை என சித்தரிக்க வேண்டாம்.
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் இதனை கூறினார்.
அடுத்தாண்டு சுக்மா விளையாட்டுப் போட்டி சிலாங்கூர் மாநிலத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் இருந்து சிலம்பம் நீக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது நாட்டில் சர்ச்சையாகி உள்ளது.
குறிப்பாக பலர் தங்களின் அதிருப்திகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சிலம்பம் என்பது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாகும். இப்போட்டியில் இடம் பெற வேண்டும் என குரல் கொடுப்பது எங்களின் உரிமையாகும்.
ஆனால் இதை இனவாதப் பிரச்சினையாக்க வேண்டாம் என இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ சித்தரித்துள்ளார்.
நாங்கள் யாரும் இதை இனவாதப் பிரச்சினையாக்கவில்லை. அமைச்சர் தான் அவ்வாறு தூண்டுகிறார்.
சிலம்பம் சுக்மாவில் இடம் பெறும் என்று வாக்குறுதி கொடுத்தது இந்த அமைச்சர் தான்.
ஆக கொடுத்த வாக்குறுதியை அவர் காப்பாற்ற வேண்டும்.
காப்பாற்ற முடியவில்லை என்றால் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என டத்தோஸ்ரீ தனேந்திரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 8, 2025, 6:09 pm
2026 சிலாங்கூர் சுக்மாவில் சிலம்பம் நிலை நிறுத்தப்படும்: பாப்பாராயுடு அறிவிப்பு
August 8, 2025, 2:28 pm
மியான்மர் இராணுவ ஆட்சிக் குழு தேர்தல் திட்டங்களை தெளிவுபடுத்த வேண்டும்: முஹம்மத் ஹசான்
August 8, 2025, 2:27 pm
பிறந்த குழந்தையை வீசிய கல்லூரி மாணவிக்கு 10,000 ரிங்கிட் அபராதம்
August 8, 2025, 2:26 pm
சிலாங்கூர் மாநில சிறுவர்களுக்கான பாடும் திறன் போட்டி; ஆகஸ்ட் 24 பதிவுக்கான இறுதி நாள்: குணராஜ்
August 8, 2025, 12:00 pm
சிலாங்கூர் சுக்மாவில் சிலம்பம் இடம் பெறுவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் பேசுவேன்: கோபிந்த் சிங்
August 8, 2025, 10:11 am