நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளி வேன் மோதியதில் 6 வயது பிள்ளை காயம்

சிரம்பான்:

பள்ளி வேன் மோதியதில் 6 வயது பிள்ளை  காயமடைந்தார்.

சிரம்பான் போலிஸ் தலைவர் முஹம்மது ஹட்டா சே தின் இதனை தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை, இங்குள்ள தாமான் மந்தாவ் இந்தா 3 இல் ஆறு வயது சிறுவனை இறக்கிவிட்டுச் சென்ற பள்ளி வேன் மோதியதாகக் கூறப்படும் விபத்தில், பிள்ளையின் உடலின் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டது.

காலை 11.50 மணியளவில் நடந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர் வேனின் முன் நடந்து சென்று கொண்டிருந்தபோது மோதப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் நடந்த நேரத்தில், கியா பிரிஜியோ பள்ளி வேனின் ஓட்டுநர் 38 வயதுடைய ஒரு பெண் என்பது ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.

அவர் தாமான் மந்தாவ் இந்தாவிவில் உள்ள பாலர் பள்ளியி இருந்து வந்து கொண்டிருந்தார்.

வேன் பாதிக்கப்பட்டவரை சம்பந்தப்பட்ட சாலையில் உள்ள அவரது பாதுகாவலர் வீட்டில் இறக்கிவிடவிருந்தது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset