நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிறந்த குழந்தையை வீசிய கல்லூரி மாணவிக்கு 10,000 ரிங்கிட் அபராதம்

ஜார்ஜ்டவுன்:

பிறந்த குழந்தையை வீசிய கல்லூரி மாணவிக்கு இங்குள்ள உயர் நீதிமன்றம் 10,000 ரிங்கிட் அபராதம் விதித்தது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனது பிறந்த குழந்தையை தனது அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னலுக்கு வெளியே வீசியதாக கல்லூரி மாணவி மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்நிலையில் அம்மாணவிக்கு உயர் நீதிமன்றம் 10,000 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.

மேலும் அந்தப் பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதிக்க வேண்டாம் என்றும் நீதிமன்றம் முடிவு செய்தது.

கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் எம். சாந்தியாவின் மூன்று மாதங்களுக்கும் மேலான தடுப்புக்காவல் காலம்,

அவரது குழந்தையின் படங்களைக் காட்டும்போது குற்றம் சாட்டப்பட்டவர் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலாமை, கடுமையான மனச்சோர்வுக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதை நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொண்டதாக நீதிபதி ரோஃபியா முகமது கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset