நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் மாநில சிறுவர்களுக்கான பாடும் திறன் போட்டி; ஆகஸ்ட் 24 பதிவுக்கான இறுதி நாள்: குணராஜ்

செந்தோசா:

சிலாங்கூர் மாநில சிறுவர்களுக்கான பாடும் திறன் போட்டியின் பதிவுக்கான இறுதி நாள் ஆகஸ்ட் 24 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ள சிறுவர்கள் அதற்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் இதனை கூறினார்.

இந்திய சிறார்களை இசை, பாடல் துறையில் சாதிக்க வேண்டும் என இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக இத்துறைகளில் சிறார்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது அதன் முக்கிய நோக்கமாகும்.

அதன் அடிப்படையில் 5ஆவது ஆண்டாக இப்போட்டி நடத்தப்படுகிறது.

தமிழ் கலைஞர்கள் மன்றம், பயணங்கள் தொடரும் இயக்கம் ஆகியவற்றின் கூட்டமைப்பில் இந்த போட்டி நடைபெறுகிறது.

பதிவுக்கு பிறகு இப்போட்டி பிரமாண்டமாக தொடங்கும்.

இப்போட்டியின் பிரமாண்ட இறுதி சுற்று வரும் அக்டோபர் 11ஆம் தேதி புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 15 ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது.

ஆகவே ஆர்வமுள்ள சிறார்கள் விரைந்து வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பதிவுக்கான இறுதி நாள் செப்டம்பர் 29ஆம் தேதியாகும் என்று குணராஜ் கூறினார்.

கடந்த 4  ஆண்டுகள் இப்போட்டி வெற்றிகரமாக நடைபெற்றது.

இப்போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்கள் அனைத்துலக போட்டியிலும் சாதித்துள்ளனர்.

குறிப்பாக  இளம் பாடகி ஹேமித்ரா இந்த போட்டியின் வாயிலாக தான் தனது பயணத்தை தொடங்கினார்.

ஆக இப்போட்டியில் நாடு முழுவதும் உள்ள இளம் பாடகர்கள் கலந்து கொள்ள வேண்டும் என குணராஜ் கேட்டு கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset