நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பூச்சோங் 14ஆவது மைல் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் ஏற்பாட்டில் பல், வாய், உடல் நல சுகாதார முகாம்; ஆகஸ்ட் 23ஆம் தேதி நடைபெறும்: டத்தோ சிவம்

பூச்சோங்:

பூச்சோங் 14ஆவது மைல் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் ஏற்பாட்டில்  பல், வாய், உடல் நல சுகாதார முகாம் வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி நடைபெறும்.

ஆலயத்தின் தலைவர் டத்தோ டாக்டர் ஏபி சிவம் இதனை கூறினார்.

மலேசிய சுகாதார அமைச்சின்  ஆதரவுடன் பூச்சோங் 14ஆவது மைல் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்வாகம் இந்த பல், வாய், உடல் நல சுகாதார முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த சுகாதார முகாம் வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி சனிக்கிழமை காலை மணி 9 மணி முதல் மாலை 4 மணி வரை  பூச்சோங் 14ஆவது மைல் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.

ஆலய தரப்பினருடன் மட்டுமல்லாமல் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து இலவச உடல்நல கருத்தரங்குகள், சுகாதார முகப்புகள் யாவும் அமைக்கப்படவுள்ளது.

இந்த உடல்நல சுகாதார முகாமில் பல் பரிசோதனை, கண் பரிசோதனை, வாய் புற்றுநோய் பரிசோதனை, BMI உடல் குறியீடு சோதனைகள், பல் சுகாதார கருத்தரங்கு ஆகியவை இடம்பெறவிருக்கிறது.

மேலும், மகளிர்களுக்கான PAP SMEAR பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.

பொதுமக்கள் குறிப்பாக இந்தியர்கள் தங்களின் உடல்நலம் மீது அதீத அக்கறை கொள்ளாமல் இருப்பது பெரும் வேதனை அளிக்கக்கூடியதாக உள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதில் பெருவாரியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இதனை களையுகேட்டுக்கொண்டார்

, வாய், உடல்நல சுகாதார முகாம் ஏற்பாடு செய்யப்படுகிறது .

ஆக பூச்சோங் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் இந்த இலவச முகாமில் தங்கள் குடும்பத்தாருடன் பங்கேற்று பயனடையுமாறு டத்தோ டாக்டர் சிவம் கேட்டுக்கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன் / படம்: கார்த்திக்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset