செய்திகள் இந்தியா
உத்தராகண்ட் வெள்ளத்தில் சிக்கிய 274 பேர் மீட்பு: 59 பேரை தேடும் பணி தீவிரம்
டேராடூன்:
உத்தராகண்ட் பெருவெள்ளத்தில் சிக்கிய 274 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். 9 ராணுவ வீரர்கள் உட்பட 59 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. உத்தராகண்டில் கங்கோத்ரி கோயிலுக்கு செல்லும் வழியில் தரளி கிராமம் அமைந்துள்ளது.
இமயமலையில் சுமார் 10,200 அடி உயரத்தில் உள்ள இந்த கிராமத்தில் கடந்த 5-ம் தேதி மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டது.
கீர் கங்கா நதியில் கரைபுரண்ட வெள்ளத்தால் தரளி கிராமம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
ராணுவம், விமானப் படை, தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படைகள், மாநில காவல் துறை இணைந்து இரவு பகலாக தரளி கிராமத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளன.
வெள்ள பாதிப்புகளால் ஆங்காங்கே சிக்கித் தவித்த 274 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். 9 ராணுவ வீரர்கள் உட்பட 59 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
அமெரிக்க விசா கிடைக்காததால் ஹைதராபாத் பெண் மருத்துவர் தற்கொலை
November 24, 2025, 3:08 pm
இந்தியத் தலைநகரில் மோசமான காற்று மாசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக வெடித்தது
November 22, 2025, 6:54 pm
