நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படாது: டொனால்ட் டிரம்ப்

புது டெல்லி:

இந்தியா மீதான 25 சதவீத வரி உள்பட பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த பதிலடி வரி வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

இந்தியா மீது 25 சதவீத வரி, ஜப்பான் மீது 15 சதவீதம், லாவோஸ், மியான்மர் மீது தலா 40 சதவீதம், பாகிஸ்தான் மீது 19, சீனா, இலங்கை மீது  தலா 20 சதவீதம், பிரிட்டன் மீது 10 சதவீதம், வங்கதேசம் மீது 35 சதவீதம், மலேசியா 25 சதவீதம், பிலிப்பின்ஸ், வியத்நாம் மீது தலா 20 சதவீதம்,  தாய்லாந்து, கம்போடியா மீது தலா 36 சதவீதம், இந்தோனேஷியா மீது 32 சதவீதம் வரி ஆகியவை அமலகுக்கு வந்துள்ளன.

இதனால் அமெரிக்காவின் வரி வருவாய் அதிகரிக்கும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இந்தியாவுக்கு விரைவில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்தியாவுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படாது என டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset