நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தாக்குதல்

லண்டன்: 

அயர்லாந்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த செவிலியரின் 6 வயது மகளை சிறுவர்கள் ஒன்றாக கூடி தாக்கி உள்ளனர்.

இதேபோல், டப்ளின் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு உணவக ஊழியரை திருடர்கள் தாக்கிவிட்டு, தப்பியோடினர்.

வாட்டர்ஃபோர்டு நகரில் வசித்து வந்த செவிலியர்  மகள் நியா நவீனை 8 முதல் 14 வயதுடைய சிறுவர்கள் கும்பலாக வந்து தாக்கி, இந்தியாவுக்குத் திரும்பிப் போ போன்ற இனவெறி கருத்துகளைக் கூறியுள்ளனர். இந்தத் தாக்குதல் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

டப்ளினில் இந்திய உணவக ஊழியர் ஒருவர் மூன்று திருடர்களால் தாக்கப்பட்டார். தாக்குதலுக்குப் பிறகு, அவரது தொலைபேசியையும்  மின்சார சைக்கிளையும் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset