நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பாஜ முறைகேடு: ஆதாரங்களை வெளியிட்டார் ராகுல் காந்தி

புதுடெல்லி: 

வாக்கு திருட்டு தொடர்பான ஆதாரங்களை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று வெளியிட்டார். அதில் ஒரே தொகுதியில் 1 லட்சம் போலி வாக்காளர்களை சேர்த்து இருப்பதாகவும், ஒரு அறை கொண்ட வீட்டில் 80 வாக்காளர்கள் இருப்பதும், ஒரு வாக்காளருக்கு 4 வாக்குச்சாவடியில் ஓட்டு இருக்கும் ஆதாரத்தையும் ராகுல்காந்தி வெளியிட்டு குற்றம் சாட்டினார். 

பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. 

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இருப்பினும் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் மூலம் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. 

இதனால் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்தில் இந்த பிரச்னை குறித்து விவாதிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் தொடர்ந்து இரு அவைகளும் முடங்கி வருகின்றன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset