நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தப்பியோட முயன்ற குற்றவாளியின் கார் மோதியதில் போலிஸ் அதிகாரி மரணம்

அலோர்ஸ்டார்:

குற்றவாளியின் கார் மோதி தள்ளியதில் போலிஸ் அதிகாரி ஒருவர் மரணமடைந்தார்.

இந்த சம்பவம் இன்று மாலை இங்குள்ள தாமான் கோல்ஃப் அருகே நிகழ்ந்தது.

அப்போது பணியில் இருந்தபோது, கொள்ளைச் சந்தேக நபர் தப்பிச் செல்வதைத் தடுக்க முயன்றபோது கார் மோதி அவர் மரணமடைந்தார்.

கெடா போலிஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த 35 வயதான கார்போரல் முகமது ஹபிசுல் இஷாம் மஸ்லான் கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கெடா மாநில போலிஸ்  தலைவர் டத்தோ அட்லி அபு ஷா கூறுகையில்,

சம்பந்தப்பட்ட வீட்டில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் இருப்பதாக பொதுமக்களிடமிருந்து போலிஸ்க்கு தகவல் கிடைத்ததை அடுத்து, பிற்பகல் 3.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset