நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் இருந்து இரு ஆடவர்கள் விடுவிக்கப்பட்டனர்

ஈப்போ:

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டை எதி்ர்நோக்கிய இருவர் அக்குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

அந்த இருவர் மீது சுமத்தபபட்ட குற்றச்சாட்டை போதிய ஆதாரத்தை நிருபிக்க அரசு தரப்பு தவறியதால் அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி டத்தோ பூபிண்டர் சிங் தமது தீர்ப்பில் கூறினார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் சரான்சிங் , குல்விண்டர் சிங்,  அரசு தரப்பில் டி.பி. பி் . புஷ்பராசி ராமச்சந்திரன் ஆகியோர் ஆஜராயினர்.

இந்த வழக்கில் என். சரவணன் (வயது 35) எஸ். வேணுகோபால் (வயது 33) ஆகிய இருவரும் கடந்த 2021 ஜனவரி 3ஆம் தேதி இரவு 8.45 மணியளவில்  சித்தியவானில்  39.9 கிராம்  எடையுள்ள  போதைப் பொருளை வைத்திருந்ததாக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

இவர்கள் 20.5 கிராம் எடைக்கொண்ட  மோனோசிட்டி மோர்பின் ரக போதைப் பொருளை உடன் வைத்திருந்ததாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset