நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாய்லந்து-கம்போடியா கைதிப் பரிமாற்றத்துக்கு இணக்கம்: பிரதமர் அன்வார் அறிவிப்பு

புத்ரா ஜெயா:

தாய்லந்தும் கம்போடியாவும் கைது செய்யப்பட்ட ராணுவ வீரர்களை அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்தின்படி நடத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மரணம் அடைந்த வீரர்களின் உடல்கள் உரிய மரியாதையுடன் ஒப்படைக்கவும் இணக்கம் ஏற்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருதரப்பும் சந்தித்தன.

கடந்த மாதம் 28ஆம் தேதி சண்டை நிறுத்தத்திற்கு இரு நாடுகளும் முதலில் சம்மதித்தன. அதற்கான முயற்சியை ஆசியான் தலைவர் என்ற முறையில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் முன்னெடுத்தார்.

இனி எல்லைப் பகுதியில் சண்டை ஏற்பட நேர்ந்தால் அது மோசமடைவதற்கு முன்பு இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண இணங்கியுள்ளன.

ஆக்கப்பூர்வமாக நடைபெற்றது சந்திப்பு இது பிரதமர் கூறினார்.

ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொண்ட நிபந்தனைகளை நிறைவேற்ற இரு நாடுகளும் உறுதியளித்தன என்று அவர் மேலும் கூறினார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset