நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா, ரஷ்யா இடையிலான உறவு; புதிய இலக்கை உருவாக்கியுள்ளது: மாமன்னர்

மாஸ்கோ:

மலேசியா, ரஷ்யா இடையிலான உறவு புதிய இலக்கை உருவாக்கியுள்ளது.

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இதனை கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளையும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை ரஷ்யாவிற்கான எனது அரசுமுறைப் பயணம் பிரதிபலிக்கிறது.

மலேசியா ரஷ்யாவை நம்பகமான,  முக்கியமான கூட்டாளியாகக் கருதப்படுகிறது.

இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக நிறுவப்பட்டுள்ளன.

இது கடந்த 1967 ஏப்ரலில் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.

மாஸ்கோவுடன் உறவுகளை ஏற்படுத்திய ஆரம்பகால ஆசியான் நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

ரஷ்யாவின் பழமொழி சொல்வது போல், நட்பு பணத்தை விட மதிப்புமிக்கது.

இந்த நட்பு உணர்வில் தான், மக்களின் நலனுக்காக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் திசையை அது தொடர்ந்து வடிவமைக்கும் என்று நான் நம்புகிறேன் என்று மாமன்னர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset