நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிக் தொழிலாளர்களுக்கான சட்ட மசோதா அடுத்த வியாழக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்படும்: ஜாஹித்

கோலாலம்பூர்:

கிக் தொழிலாளர்களுக்கான சட்ட மசோதா  அடுத்த வியாழக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்படும்.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

நாட்டில் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான கிக் பொருளாதாரத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக சிறப்பாக கிக் தொழிலாளர் சட்ட மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட மசோதா அடுத்த வியாழக்கிழமை மக்களவையில் முதல் வாசிப்புக்காக தாக்கல் செய்யப்படும்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது வாசிப்புகள் ஆகஸ்ட் 26ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த சட்டம் கூட்டத்தொடர் முடிவதற்குள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையும் உள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset