நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மலேசியாவில் பிறந்த இன்டெல் தலைமை நிர்வாக அதிகாரி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்: டிரம்ப் வலியுறுத்து

வாஷிங்டன்:

மலேசியாவில் பிறந்த இன்டெல் தலைமை நிர்வாக அதிகாரி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இதனை வலியுறுத்தியுள்ளார்.

சீனாவில் உள்ள நிறுவனங்களுடனான அவரது உறவுகள் குறித்து குடியரசுக் கட்சி செனட்டர் ஒருவர் தேசிய பாதுகாப்பு கவலைகளை எழுப்பியுள்ளார்.

இதை அடுத்து, அமெரிக்க சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல்லின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிபர் வலியுறத்தி  உள்ளார்.

இதனால் இன்டெல்லின் தலைமை நிர்வாக அதிகாரி மிகவும் சிக்கலில் உள்ளார்.

அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு வேறு எந்த தீர்வும் இல்லை என்று டிரம்ப் தனது உண்மை சமூக தளத்தில் கூறினார்.

செனட்டர் டாம் காட்டன் தலைமை நிர்வாக அதிகாரி லிப்.பு டானுக்கும் சீன நிறுவனங்களுக்கும் இடையிலான உறவைக் கேள்விக்குட்படுத்தி இன்டெல்லுக்கு கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset