
செய்திகள் உலகம்
சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் முக்கிய விவகாரங்களைப் பேச ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும்: உள்துறை அமைச்சர் கா. சண்முகம்
சிங்கப்பூர்:
இந்தியச் சமூகத்தின் முக்கிய விவகாரங்கள் குறித்துக் கலந்துபேச ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும் என்று தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா. சண்முகம் அறிவித்தார்.
மூத்த துணையமைச்சர் முரளி பிள்ளை, துணையமைச்சர் தினேஷ் வாசுதாஸ் இருவரும் ஒருங்கிணைப்புக் குழுவை வழிநடத்துவர். அரசாங்க ஊழியர்களோடும் மக்கள் கழகத்துடனும் அவர்கள் ஒன்றாகப் பணியாற்றுவர் என்று அமைச்சர் சண்முகம் கூறினார்
இந்தியச் சமுதாயத்தை இன்னும் எவ்வாறு ஒன்றிணைக்கலாம் என்பதே இந்தச் செயற்குழுவின் முக்கிய நோக்கம் என்று கூறினார் துணையமைச்சர் தினேஷ் வாசுதாஸ்.
நம் இந்தியச் சமுதாயத்தில் சிண்டா, நற்பணிப் பேரவைப் போன்ற பல குழுக்கள் இருக்கின்றன. இவை நல்ல பல செயல்களைச் செய்துவருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
சமூகத்தின் கருத்துகளைச் சேகரிப்பதில் ஒருங்கிணைப்புக் குழு கவனம் செலுத்தும். சமூகத்தை இன்னும் மேம்படுத்துவது எப்படி, எளிதில் பாதிக்கப்படுவோருக்கு உதவுவது எப்படி என்பதும் ஆராயப்படும் என்றார் அவர்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
August 10, 2025, 1:52 pm
லண்டனில் பாலஸ்தீன் ஆதரவு ஆர்ப்பாட்டம்: 466 பேர் கைது
August 10, 2025, 9:28 am
சிங்கப்பூரின் 60 ஆவது ஆண்டு தேசிய தின அணிவகுப்பு: மக்கள் பரவசம்
August 9, 2025, 6:47 pm
சீனாவின் பௌத்த ஆலயத்தில் புதிய விதிமுறைகள்: மடத்தைவிட்டு வெளியேறும் துறவிகள்
August 9, 2025, 2:44 pm
சிங்கப்பூர் தேசிய தினம் - Google Doodle
August 8, 2025, 4:46 pm
அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தாக்குதல்
August 8, 2025, 12:15 pm
மியான்மா் இடைக்கால அதிபா் காலமானார்
August 7, 2025, 8:31 am
இந்தியாவுக்கான 25 சதவிகித வரியை 50% ஆக உயர்த்திய ட்ரம்ப்
August 6, 2025, 10:08 am