நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுக்மாவில் சிலம்பம் இடம் பெறாததை இனப் பிரச்சினையாக்க வேண்டாம்: ஹன்னா இயோ

கோலாலம்பூர்:

சிலாங்கூர் சுக்மாவில் சிலம்பம் இடம் பெறாததை இனப் பிரச்சினையாக்க வேண்டாம்.

இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ இதனை வலியுறுத்தினார்.

2026 சுக்மா போட்டியில் இருந்து பாரம்பரிய இந்திய தற்காப்புக் கலையான சிலம்பம் நீக்கப்பட்டது.

இந்த விவகாரத்தை இனப் பிரச்சினையாக மாற்ற வேண்டாம்.

மேலும்  இந்த முடிவு போட்டியை நடத்தும் மாநிலத்தின் தனிச்சிறப்பு என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுக்மா உச்சமன்ற குழு கூடி, போட்டியை நடத்தும் மாநிலமாக சிலாங்கூர் தங்களுக்கு முக்கியமானதாகக் கருதும் பல விளையாட்டுகளைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளது.

ஆகவே விளையாட்டுகளைப் பற்றி விவாதிக்கும்போது இனப் பிரச்சினைகளுடன் விளையாட வேண்டாம்.

இதை நான் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset