
செய்திகள் உலகம்
இந்தியாவுக்கான 25 சதவிகித வரியை 50% ஆக உயர்த்திய ட்ரம்ப்
வாஷிங்டன்:
இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், அதை 50% ஆக உயர்த்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, இந்தியா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்துவதாக அறிவித்ததுடன் 10 சதவீதஅடிப்படை கட்டணத்தையும் ட்ரம்ப் விதித்தார்.
இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டது. இது ஆகஸ்ட் 7- ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்தாவிட்டால், கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா தொடர்ந்து கொள்முதல் செய்து வரும் நிலையில், இந்தியா மீது மேலும் 25 சதவீதம் கூடுதல் வரிகளைவிதிக்கும் உத்தரவில் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளார்.
இதன்மூலம், அமெரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான மொத்த வரி விதிப்பு 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 10, 2025, 1:52 pm
லண்டனில் பாலஸ்தீன் ஆதரவு ஆர்ப்பாட்டம்: 466 பேர் கைது
August 10, 2025, 9:28 am
சிங்கப்பூரின் 60 ஆவது ஆண்டு தேசிய தின அணிவகுப்பு: மக்கள் பரவசம்
August 9, 2025, 6:47 pm
சீனாவின் பௌத்த ஆலயத்தில் புதிய விதிமுறைகள்: மடத்தைவிட்டு வெளியேறும் துறவிகள்
August 9, 2025, 2:44 pm
சிங்கப்பூர் தேசிய தினம் - Google Doodle
August 8, 2025, 4:46 pm
அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தாக்குதல்
August 8, 2025, 12:15 pm
மியான்மா் இடைக்கால அதிபா் காலமானார்
August 6, 2025, 10:08 am