நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கார் தீப்பிடித்து எரிந்ததால் பினாங்கு பாலத்தில் 10 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்

ஜார்ஜ்டவுன்:

பினாங்கு பாலத்தில் வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதிக வாகனங்கள் செல்லும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து  தீயணைப்பு பணிக்காக சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.

சாலையைப் பயன்படுத்துபவர்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நெரிசலில் சிக்கித் தவித்தனர்.

ஜாலான் பேரா தீயணைப்பு மீட்பு நிலையத்தின் செயல்பாட்டு பிரிவு இயக்குநர் அஸ்மான் இப்ராஹிம்,

இன்று காலை 7.04 மணிக்கு தனது குழுவினருக்கு இந்த சம்பவம் குறித்து அழைப்பு வந்ததாகக் கூறினார்.

ஜார்ஜ்டவுன் நோக்கிச் செல்லும் பாலத்தின் 6.8 கிலோமீட்டர் தொலைவில் பெரோடுவா மைவி கார் தீப்பிடித்ததாக அவர் கூறினார்.

அதிகாரிகள் 10 நிமிடத்திற்கு தீயை அணைத்தனர்.

நிலைமை முற்றிலும் பாதுகாப்பானது ஆகும் வரை அணைக்கும் பணிக்காக நாங்கள் 30 நிமிடங்களுக்கு பாதையை தற்காலிகமாக மூட வேண்டியிருந்தது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset