நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தகவல் தொடர்பு துறை அமைச்சின் நண்பர்கள் குழுவில் கணபதிராவ் நியமனம்

கோலாலம்பூர்:

தகவல் தொடர்பு துறை அமைச்சின் நணபர்கள் குழுவில் (Frinds of ministry -FOM) கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ்  நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்திற்கான கடிதத்தை தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் அவரிடம் வழங்கினார்.

இந்த தருணத்தில் அமைச்சருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கணபதி ராவ் தெரிவித்தார்.

இந்த நியமனம், அமைச்சகத்துடனும் மடானி அரசாங்கத்தின் சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் மூலோபாய உறவை வலுப்படுத்த எனக்கு வாய்ப்பளிக்கும்.

அனைவரின் நல்வாழ்விற்காக மக்களவையில் கொள்கைகளை வழங்குவதிலும் மக்களின் குரல்களை வலுப்படுத்துவதிலும் தொடர்ந்து தீவிர பங்காற்ற நான் உறுதி பூண்டுள்ளேன் என்று கணபதிராவ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset