நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் சுக்மா போட்டியில் சிலம்பத்தை நீக்கியது ஏன்?: டாக்டர் சுரேஸ் கேள்வி

கோலாலம்பூர்:

அடுத்தாண்டு சிலாங்கூரில் நடைபெறும் சுக்மாவில் சிலம்பப் போட்டி நீக்கப்பட்டுள்ளது,

சுக்மா உயர் குழுவின் இந்த முடிவால் நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம் என்று மலேசிய சிலம்ப கழகத்தின் தலைவர் டாக்டர் சுரேஸ் கூறினார்.

தன்னிச்சையான இந்த முடிவு, விளையாட்டுத் திறன், நியாயத்தின் உணர்வை குறைத்து மதிப்பிடுகிறது.

சிலம்பம் என்பது அங்கீகாரம், ஆதரவுக்கு தகுதியான ஒரு பாரம்பரிய தமிழர்களின் தற்காப்புக் கலை.

மேலும் இந்த அநீதியான முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சுக்மா உயர் குழுவை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

எங்கள் சமூகத்தில் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் தடகள சிறப்பை மேம்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இந்த விவகாரத்தை இளைஞர், விளையாட்டு அமைச்சர், தேசிய விளையாட்டு மன்றத்திடம் உரிய பரிசீலனைக்கு கொண்டு செல்வதை நாங்கள் நிறுத்த மாட்டோம் என்று டாக்டர் சுரேஸ் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset