நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாரா மரண வழக்கில் வைரலாகும் ஆடியோ உண்மையானது: வழக்கறிஞர்

கோத்தா கினபாலு:

மாணவி ஷாரா கைரினா மகாதீரின் மரண வழக்கில் வைரலாகும் ஆடியோ உண்மையானதாகும்.

ஷாராவின் தாயார் நோரைடாவால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஹமீத் இஸ்மாயில் இதனை உறுதிப்படுத்தினார்.

'காக் எம்' தொடர்பாக மாணவிக்கும் அவரது தாயாருக்கும் இடையே நடந்த உரையாடலைக் காட்டும் 44 வினாடி ஆடியோ பதிவு வைரலாகி வருகிறது.

வைரலாகும் இந்த ஆடியோ உண்மையான தாகும். இந்த குரல் பதிவு மேலும் நடவடிக்கைக்காக  போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் 13 வயது மாணவியின் மரணம் குறித்து பல்வேறு கோட்பாடுகளைத் தூண்டுவதையும் ஆதாரமற்ற ஊகங்களைப் பரப்புவதையும் நிறுத்துமாறு ஹமீத் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

சமூக ஊடகங்களில் பல்வேறு காட்டுமிராண்டித்தனமான கதைகள் பரப்பப்பட்டு வருகிறது.

விசாரணை செயல்பாட்டில் தலையிடுவது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர், அவரது குடும்பத்தினரின் நற்பெயரையும் கண்ணியத்தையும் கெடுக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset