நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மகனால் நாற்காலியால் கடுமையாக தாக்கப்பட்ட தந்தை மரணம்

கோல கிராய்:

தனது மகனால் நாற்காலியால் கடுமையாக தாக்கப்பட்ட முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் இன்று காலை 6.30 மணியளவில்  இங்குள்ள கம்போங் கோலா கிரிஸில் நடந்தது.

74 வயதான பாதிக்கப்பட்ட முதியவர் பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

பாதிக்கப்பட்டவருக்கும் சந்தேக நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதற்கு முன்பு சந்தேக நபர் மர நாற்காலியால் தாக்கியதாகவும் தெரிகிறது.

சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேக நபர் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.

மேலும் பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோலா கிராய் சுல்தான் இஸ்மாயில் பெட்ரா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

கோலா கிராய் மாவட்ட போலிஸ் தலைவர் மஸ்லான் மாமாத்  இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset