நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒதுக்கீடு விவகாரங்களில் எதிர்க்கட்சிகளை மட்டும்  குறை சொல்ல வேண்டாம்: ஹம்சா

கோலாலம்பூர்:

நாடாளுமன்ற உறுப்பினர்களூக்கான  ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினையில் எதிர்க்கட்சி கூட்டணியை மட்டும் குறை கூற வேண்டாம்.

நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ ஹம்சா ஜைனுடின் அரசாங்கத்தை இதனை கேட்டுக் கொண்டுள்ளது.

எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லாததால் இது தீர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சர்கள் கேள்வி நேர அமர்வின் போது,

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடு தொடர்பான ஒப்பந்தம் குறித்து பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் மீண்டும் கேள்வி எழுப்பியதாக அவர் கூறினார்.

எதிர்க்கட்சியை மட்டும் குறை சொல்லாதீர்கள். அரசாங்கத்தை பற்றிய நிலை என்ன?

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கலூக்கு ஒதுக்கீடு வழங்க அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் ஒப்புக்கொள்கிறதா என்று அவர்  முகநூலில் கூறினார்.

ஒதுக்கீடு தொடர்பாக பிரதமரைச் சந்திக்க விரும்புகிறேன்.

இருப்பினும் இந்த விஷயத்தை துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோப்பிடம் விட்டுவிட வேண்டும் என்று அன்வார் வலியுறுத்துகிறார் என ஹம்சா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset