நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுதந்திரத்திற்கு பிறகு பூமிபுத்ராக்களுக்கு அதிக ஒதுக்கீடு வழங்க மடானி அரசாங்கம்  மட்டுமே துணிந்துள்ளது: பிரதமர்

கோலாலம்பூர்:

சுதந்திரத்திற்கு பிறகு பூமிபுத்ராக்களுக்கு அதிக ஒதுக்கீடு வழங்க மடானி அரசாங்கம் மட்டுமே துணிந்துள்ளது.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

நாட்டின் 13ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் பூமிபுத்ராக்களுக்கான ஒதுக்கீடு, நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து மிக உயர்ந்ததாகும்.

இத்திட்டத்தின்  கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட பூமிபுத்ராக் பொருளாதார மாற்றத் திட்டம் 2035, பூமிபுத்ரா பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டிற்கு தெளிவான சான்றாகும்.

ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒற்றுமை அரசாங்கம் சில சமூகங்களை மற்றவர்களை விட முன்னுரிமை அளிக்கிறது என்ற கூற்றுகளையும் நான் நிராகரிக்கிறேன்.

இந்த 13ஆவது மலேசித் திட்டத்ட்தின் நாம் அனைவரும் மதிப்பாய்வு செய்ய வேண்டும். இல்லையெனில், ஒதுக்கீடுகள் கம்போங் பாரு சீனாவுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன.

இந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் கட்சிகள் 13ஆவது மலேசியத் திட்டத்தின்  ஆவணத்தைப் படிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.

நகரங்களில் மலாய் ரிசர்வ் மேம்பாட்டிற்காக உட்பட பூமிபுத்ராக்களுக்கான செலவு மிக உயர்ந்த ஒன்றாகும். சுதந்திரத்திற்குப் பிறகு மலேசியா இந்த அளவு ஒதுக்கீட்டைப் பெற்றதில்லை.

மடானி அரசாங்கம் மட்டுமே அதைச் செயல்படுத்தத் துணிந்து செய்கிறது என பிரதமர் மக்களவையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset