நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பாதுகாப்பாக மாஸ்கோ சென்றடைந்தார்

மாஸ்கோ:

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பாதுகாப்பாக மாஸ்கோ சென்றடைந்தார்.

ரஷ்யாவிற்கு ஆறு நாள் அரசு முறைப் பயணமாக மாமன்னர் நேற்று மாஸ்கோ சென்றடைந்தார்.

அவர் பயணித்த  சிறப்பு விமானம் மலேசிய நேரப்படி இரவு 7.20 மணி வுனுகோவோ2 சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

விமான நிலையத்தின் மாமன்னரை ரஷ்ய அறிவியல், உயர்கல்வி அமைச்சர் வலேரி பால்கோவ்,  ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் அரசு நெறிமுறைத் துறையின் செயல் இயக்குநர் ஜார்ஜி குஸ்நெட்சோவ் ஆகியோர் அவரை வரவேற்றனர்.

ரஷ்ய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் அலெக்சாண்டர் பான்கின்,  மலேசியாவுக்கான ரஷ்ய தூதர் நெய்ல் லாட்டிபோவ் ஆகியோரும் அவரை வரவேற்க உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset