நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் இரு பேருந்துகள் மோதல்: 13 பேர் மருத்துவமனையில் அனுமதி

சிங்கப்பூர்:

தெம்பனிஸில் இரு பேருந்துகளும் ஒரு காரும் மோதிக்கொண்டதில் 13 பேர் காயமுற்றனர்.

12 பேருந்துப் பயணிகளும் 69 வயதுப் பேருந்து ஓட்டுநரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்கள் 30 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

விபத்து தெம்பனிஸ் அவென்யூ 2க்கும் அவென்யூ 7க்கும் இடையே உள்ள சாலைச் சந்திப்பில் நேர்ந்தது.

சம்பவம் குறித்து இன்று காலை சுமார் 10.20 மணிக்குத் தகவல் கிடைத்தது எனச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

ஐவர் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். 8 பேர் செங்காங் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset