நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அந்நியத் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் உணவகத் துறை தொடர்ந்து நலிந்து வருகிறது: காதிர் சுல்தான்

கோலாலம்பூர்:

அந்நியத் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் உணவகத் துறை மீண்டும் நலிந்துவிடுமோ என்ற அச்சம் தலைதூக்கி உள்ளது.

பிரெஸ்மாவின் முன்னாள் துணைத் தலைவர் ஹாஜி காதிர் சுல்தான் இதனை கூறினார்.

அந்நியத்  தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சினை என்பது நாட்டில் ஒரு தொடர் கதையாக உள்ளது. அரசாங்கம் தொழிலாளர்களை விடுவிக்காமல் வைத்துள்ளது எங்கள் தொழிலுக்கு மிகவும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக அந்நியத் தொழிலாளர்கள் இல்லாதது உணவகத் துறைக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இது வரை கிட்டத்தட்ட 650 உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக எங்கள் சங்கமான பிரெஸ்மாவின் ஆதாரங்கள் கூறுகின்றன.

மேலும் உணவகத் துறை என்பது கடையோடு முடிந்துவிடாது. இதுவொரு மிகப் பெரிய உணவு சங்கிலித் துறையாகும்.

எங்களின் இந்தப் பாதிப்பு அனைத்து தொழில் துறைகளுக்கும் பாதிப்பாக தான் முடியும்.

ஏன் நாட்டின் பொருளாதாரமும் இதனால் பெருமளவில் பாதிப்படையும்.

ஆக அரசாங்கம் உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.

எங்களுக்கு 20,000, 30,000 பேர் தேவை என்று நாங்கள் கூறவில்லை.

மாறாக தேவைப்படுபவர்கள் மட்டும் தான் அந்நியத் தொழிலாளர்களுக்கு விண்ணப்பிக்க உள்ளனர்.

அதனால் அந்நியத் தொழிலாளர்களுக்கான கோரிக்கைகளை எளிதாகவும் பொதுவாகவும் வைக்க வேண்டும். அரசு பூர்த்தி செய்து தர வேண்டும்.

இதுவே உணவக உரிமையாளர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரும் மடானி அரசாங்கமும் எங்கள் கோரிக்கையை கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஹாஜி காதிர் சுல்தான் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset