நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வீடற்ற ஒருவருக்கு கோழி எலும்புகள் வழங்கும் வீடியோ தொடர்பிலான விசாரணையை எம்சிஎம்சி தொடங்கியது 

சைபர்ஜெயா:

வீடற்ற ஒருவருக்கு கோழி எலும்புகள் வழங்கும் வீடியோ தொடர்பிலான விசாரணை தொடங்கியுள்ளது.

எம்சிஎம்சி எனப்படும் தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம் ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.

சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்கவர்கள் என்று நம்பப்படும் ஒரு குழு வீடற்ற ஒருவருக்கு வீசப்பட்ட உணவை வழங்கும் வீடியோ வைரலாகி உள்ளது.

இந்த வீடியோ குறித்து எம்சிஎம்சி விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மலிவான பொழுதுபோக்குக்காகவோ அல்லது பார்வைகளைப் பெறுவதற்காகவோ தனிநபர்களின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் உள்ளடக்கத்தை தயாரித்து விநியோகிக்கும் செயலை எம்சிஎம்சி தீவிரமாகக் கருதுகிறது.

வீடற்ற மக்களை அவமதிக்கும் உள்ளடக்கத்தை விநியோகிப்பது நெறிமுறையற்றது மட்டுமல்லாமல்,

சமூகத்தில் மனிதாபிமானமற்ற கலாச்சாரத்தை இயல்பாக்குவதற்கும் வழிவகுக்கிறது என்று ஆணையம் வலியுறுத்தியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset