நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளியை விட்டு வெளியேறும் வயதை 16ஆக அரசாங்கம்  நிர்ணயிக்க வேண்டும்: ரபிசி

கோலாலம்பூர்:

பிள்ளைகள் பள்ளியை விட்டு வெளியேறும் வயதை 16ஆக அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும்.

முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லி இதனை முன்மொழிந்தார்.

பிள்ளைகள் பள்ளி படிப்பை 16 வயதிற்கு முன்பே முடிக்கப்பட வேண்டும்.

காரணம் மலேசியா ஒரு வயதான நாடு என்ற பிம்பத்தில் இருந்து வெளியேற்றப்ப்பட வேண்டும்.

மேலும்  16 வயதிலேயே பள்ளி படிப்பை முடிக்கும் வேளையில் அவர்கள் இளம் வயதிலேயே வேலை உலகில் சேர இது ஒரு வாய்ப்பை வழங்கும்.

அதே வேளையில் நமது குழந்தைகள் 21 வயதிலேயே வேலைத் துறையில் சீக்கிரமாக சேரத் தொடங்க வேண்டும்.

மக்களவையில் 13ஆவது மலேசியா திட்டம் குறித்த விவாதத்தில் பங்கேற்றபோது பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரபிசி இவ்வாறு கூறினார்.

பொருளாதார அம்சங்கள், மேம்பாட்டுத் திட்டங்களில் கவனம் செலுத்துவதில்லை என்று கூறப்பட்ட 13ஆவது மலேசியா திட்ட விளக்கக்காட்சி குறித்து கருத்து தெரிவித்த ரபிசி,

இந்த விஷயங்களுக்கு ஏற்கனவே முறையே 2023, 2024 ஆம் ஆண்டுகளில் கவனம் செலுத்தப்பட்டது என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset