நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசியக் கூட்டணியின் கீழ் மஇகா, மசீசவுடன் இணைந்து பணியாற்ற பாஸ் தயாராகவுள்ளது: ஹஷிம் ஜாசின்

கோலாலம்பூர்:
தேசியக் கூட்டணியின் கீழ் மஇகா, மசீசவுடன் இணைந்து பணியாற்ற பாஸ் கட்சி தயாராக உள்ளது.

பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவர் ஹஷிம் ஜாசின் இதனை கூறினார்.

இவ்விரு கட்சிகளுடன் தேசியக் கூட்டணி ஒத்துழைப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்.

ஆனால் இவ்விவகாரம்  கூட்டணியின் உயர்மட்ட தலைவர்களால் மேலும் விவாதிக்கப்பட வேண்டும்.

ஜசெகவைத் தவிர பல்வேறு கட்சிகளுடன் ஒத்துழைப்பை உருவாக்குவதில் கொள்கையளவில் கட்சிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஒத்துழைப்பு ஒரு யதார்த்தமாக மாறுவதற்கு, தலைமையின் உயர்மட்ட தலைவர்களுக்கு இடையே மேலும் விவாதங்கள் தேவைப்படுகிறது.

வரவிருக்கும் 16ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த கூட்டணி மற்ற கட்சிகளை ஏற்றுக்கொள்ளத் திறந்திருக்கிறது என்றும் அவர் கூறினார்.

முன்னதாக அரசாங்கத்திலோ அல்லது அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களிலோ எந்தப் பதவிகளும் வழங்கப்படாதது குறித்த அதிருப்தியை மஇகா துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம். சரவணன் அண்மையில் வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset