நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புலம்பெயர்ந்தோர் உட்பட ஆட்கடத்தல் சம்பவங்கள் தடுப்பு; 1,005 பேர் கைது: 1 பில்லியன் ரிங்கிட் பறிமுதல்

கோலாலம்பூர்:

புலம்பெயர்ந்தோர் உட்பட ஆட்கடத்தல் சம்பவங்கள் தடுக்கப்பட்டதில் 1,005 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிட்டத்தட்ட 1 பில்லியன் ரிங்கிட் பறிமுதல் செய்யப்பட்டனது என்று பொது செயல்பாட்டுப் படையின் மத்திய படையின் மூத்த உதவி ஆணையர் ஹக்கீமல் ஹவாரி இதனை கூறினார்.

கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 228 ஆட்கடத்தல் தடுப்பு, புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்பு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த  நடவடிக்கைகள் மூலம் போலிஸ்படையினர் 1,005 நபர்களைக் கைது செய்துள்ளனர். மேலும் 1 பில்லியன் ரிங்கிட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர் மாநிலங்களை உள்ளடக்கிய மத்திய படைப்பிரிவின் பொறுப்பில் மொத்தம் 228 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

சிலாங்கூரில் மட்டும் 10 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் 15 நிலத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset