நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசியக் கொடியை தலைக் கீழாக பறக்க விட்ட சம்பவம்; தொடர் விசாரணையுடன் நடவடிக்கை தேவை: அக்மால் சாலே 

கோலாலம்பூர்:

தேசியக் கொடியை தலைக் கீழாக பறக்க விட்ட சம்பவம் தொடர்பில்  தொடர் விசாரணையுடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே இதனை கூறினார்.

சமீபத்தில் ஒரு பள்ளியில் தேசியக் கொடி தலைகீழாக தொங்கவிடப்பட்ட விவகாரம் அரசியல் பிரச்சினை அல்ல.

மாறாக அது தேசபக்தி சார்ந்தது. எனவே, முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டு.

இந்த சம்பவம் மாற்றுத்திறனாளிகள் சம்பந்தப்பட்டதாக இருந்தால், நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேற்பார்வை இல்லாமல் மாற்றுத்திறனாளி  நபர்கள் தேசியக் கொடியைத் தொங்கவிட அனுமதித்தால்,

துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு சம்பந்தப்பட்ட பள்ளி பொறுப்பேற்க வேண்டும் என்று டாக்டர் அக்மல் சலே கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset