நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாய்லாந்து, கம்போடிய மோதல் பேச்சுவார்த்தைகள்; வரும் வியாழக்கிழமை  இறுதி செய்யப்படும்: பிரதமர்

கோலாலம்பூர்:

தாய்லாந்து, கம்போடிய எல்லை மோதல் பேச்சுவார்த்தைகள் வரும் வியாழக்கிழமை இறுதி செய்யப்படும்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள இராணுவத் தலைவர்கள், மலேசிய ஆயுதப்படைத் தளபதியின் ஒருங்கிணைப்பில் கோலாலம்பூரில் ஒரு கூட்டத்தை நடத்துவார்கள்.

மலேசியாவால் ஒருங்கிணைக்கப்பட்ட பல சந்திப்பு இடங்களை இந்த வியாழக்கிழமைக்கு முன்னதாகவோ இறுதி செய்யப்படும் என நாங்கள் நம்புகிறோம்.

காரணம் வரும்  ஆகஸ்ட் 7 ஆம் தேதி, கம்போடிய,  தாய்லாந்து பாதுகாப்பு அமைச்சர்கள் ஒரு உடன்பாட்டை எட்ட ஒன்றாக இருப்பார்கள்.

போர் நிறுத்தத்தை நிறுத்த அல்லது தொடர ஒரு இறுதி, உறுதியான தீர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று  பிரதமர் மக்களவையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset