
செய்திகள் மலேசியா
அழிந்து வரும் இன ஆமைகளை மலேசியாவிற்குள் கடத்தும் முயற்சி: இந்திய சுங்கத்துறை அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டது
பெங்களூரு:
அழிந்து வரும் இன ஆமைகளை மலேசியாவிற்குள் கடத்தும் முயற்சி இந்திய சுங்கத்துறை அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ஆடவர் ஒருவர் மலேசியாவுக்கு செல்லவிருந்தார்.
அப்போது அவர் 30 இந்திய நட்சத்திர ஆமை குஞ்சுகளுடன் கைது செய்யப்பட்டார்.
29 வயதுடைய ஆஷிக் அலி என்ற நபர், கேஎல்ஐஏ செல்லும் பாத்தேக் ஏர் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு இந்திய சுங்கத்துறையின் வான் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டார்.
அனைத்துலக வர்த்தகத்திற்கு தடை செய்யப்பட்ட அழிந்துவரும் ஆமை குஞ்சுகளை அவரின் பயணப் பெட்டியில் இருப்பதை அதிகாரிகள் கண்டுப் பிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்திய அதிகாரிகள் அந்த நபரைக் கைது செய்துள்ளனர்.
அதே நேரத்தில் ஆமை மறுவாழ்வு நோக்கங்களுக்காக கர்நாடக வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 5, 2025, 6:18 pm
பக்காத்தான் ஹராப்பான் பரிசான் நேசனல் கூட்டணி வலுவாகவும் சிறப்பாகவும் உள்ளது: சிவநேசன்
August 5, 2025, 2:58 pm
அந்நியத் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் உணவகத் துறை தொடர்ந்து நலிந்து வருகிறது: காதிர் சுல்தான்
August 5, 2025, 11:55 am
தேசியக் கொடியை தலைக் கீழாக பறக்க விட்ட சம்பவம்; தொடர் விசாரணையுடன் நடவடிக்கை தேவை: அக்மால் சாலே
August 5, 2025, 11:54 am
வீடற்ற ஒருவருக்கு கோழி எலும்புகள் வழங்கும் வீடியோ தொடர்பிலான விசாரணையை எம்சிஎம்சி தொடங்கியது
August 5, 2025, 11:53 am