நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இணைய வணிகக் கமிஷன்கள் அதிகரிப்பதால் தொழில்முனைவர்கள் மைமால் வணிகத் தளத்தை பயன்படுத்த வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

மின் வணிகக் கமிஷன்கள் அதிகரிப்பதால் மைமால் தளத்தை தொழில்முனைவர்கள் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

ஷோபி, டிக்டாக், லசாடா போன்ற முக்கிய இணைய வணிகத் தளங்களில் கமிஷன் விகிதங்களை அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த கமிஷன் அதிகரிப்பதன் அழுத்தத்திற்கு ஆளாகமல் சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவர்கள் மைமால் தளத்திற்கு மாற ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

மைமால் என்பது அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மின் வணிகத் தளமாகும்.

மேலும் இது 2022 முதல் உள்ளூர் தொழில்முனைவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

மைமால் என்பது வெறும் இணைய மார்க்கெட்டிங் தளம் மட்டுமல்ல.

மாறாக சிறு, குறு, நடுத்தர வணிகர்கள், கூட்டுறவு நிறுவனங்கள் அதிகரித்து வரும் வணிகச் செலவுகளின் சவால்களை எதிர்கொள்ள உதவும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு இலக்கவியல் சுற்றுச்சூழல் அமைப்பாகும்.

இணைய வணிக தளங்களில் விற்பனை கமிஷன்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து தொழில்முனைவர்களின் நலனை பாதுகாக்க அமைச்ச எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஈப்போ நாடாளுமன்ற உறுப்பினர் லீ சுவான் ஹவ் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் இவ்வாறு கூறினார்.

இந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 3,407 வர்த்தகர்கள் மைமாலில் பதிவு செய்துள்ளனர்.

இதன் மொத்த விற்பனை மதிப்பு 24.3 மில்லியன் ரிங்கிட்டாக பதிவாகியுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset