நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாரா மரண வழக்கு தொடர்பான முழு முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஏஜிசி ஆராய்கிறது

கோலாலம்பூர்:

மாணவி ஷாரா மரண வழக்கு தொடர்பான முழு முதற்கட்ட விசாரணை அறிக்கையை சட்டத்துறை தலைவர் அலுவலகம் (ஏஜிசி) ஆராய்ந்து வருகிறது.

ஏஜிசி வெளியிட்ட ஒர் அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

படிவம் 1  மாணவி ஷாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பாக  போலிஸ்படையிடம் இருந்து முழு விசாரணை அறிக்கை பெறப்பட்டது.

இந்த முழு முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஏஜிசி தற்போது ஆய்வு செய்து வருகிறது.

அறிக்கை ஆகஸ்ட் 3 ஆம் தேதி சபா கிளையிலும், ஆகஸ்ட் 4 ஆம் தேதி புத்ராஜெயாவில் உள்ள சட்டத்துறை தலைவர் அலுவலக தலைமையகத்திலும் ஒப்படைக்கப்பட்டன.

மறுஆய்வு செயல்முறை சட்டத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது மற்றும் எடுக்கப்பட்ட ஒவ்வொரு முடிவும் சட்டத்தின் அடிப்படையில் அமைந்திருப்பதையும் நீதியின் கொள்கைகளை பூர்த்தி செய்வதையும் உறுதி செய்வதற்காக வழங்கப்பட்ட உண்மைகளையும் உள்ளடக்கியதுக.

முதற்கட்ட விசாரணை அறிக்கையின் மறுஆய்வு செயல்முறை முடிந்ததும் வழக்கு தொடர்பான எந்தவொரு முடிவும் அறிவிக்கப்படும்  என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset