நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திரெங்கானு, கிளந்தானுக்கு 5 பில்லியன் ரிங்கிட்  எஹ்சான் பணம் அனுப்பபட்டுள்ளது: பிரதமர்

கோலாலம்பூர்:

திரெங்கானு, கிளந்தான் மாநிலங்களுக்கு கிட்டத்தட்ட 5 பில்லியன் ரிங்கிட் எஹ்சான் பணம் அனுப்பபட்டுள்ளது.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

2023 முதல் 2025க்கும் இடையில் திரெங்கானுவிற்கு மொத்தம் 4 பில்லியன் ரிங்கிட்  எஹ்சான் பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கிளந்தானுக்கு 967 மில்லியன் ரிங்கிட் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இரு மாநிலங்களிலும் உள்ள மக்களுக்கு பயனளிக்கும்  திட்டங்களை செயல்படுத்துவதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த உதவி கிளந்தான், திரெங்கானு அரசாங்கங்களின் ஊதியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.

குறிப்பாக வறுமை ஒழிப்பு,  உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் ஆகும். கூடுதலாக மாநில அரசாங்கத்தின் இரண்டாவது உறுதி மொழியின் கட்டணத்தைத் தீர்க்க உதவும்.

கிழக்கு கடற்கரை மாநிலங்களுக்கான பெட்ரோலிய ராயல்டி கொடுப்பனவுகளின் நிலை குறித்து கேட்ட பெங்கலான் செப்பா நாடாளுமன்ற உறுப்பின அஹ்மத் மர்சுக் ஷாரி எழுப்பிய கேள்விக்கு பிரதமர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset