நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கழிவு நீர் தொட்டி குழியில் விழுந்த 2 வயது சிறுவன் மரணம்

சிபு:

கழிவு நீர் தொட்டி குழியில் விழுந்த  2 வயது சிறுவன் மரணமடைந்தான்.

சரவா தீயணைப்பு, மீட்புத் துறையின் செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் இதனை உறுதிப்படுத்தினார்.

இந்த சம்பவம் இன்று மாலை ஜாலான் பெடாடாவில் நிகழ்ந்தது.

மாலை 6.29 மணிக்கு தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படை அதிகரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு வந்தவுடன், தீயணைப்பு வீரர்களுக்கு ஒரு சிறுவன் சம்பந்தப்பட்ட பாதைக்கு அருகில் உள்ள  கழிவு நீர் குழியில் விழுந்துவிட்டதாக தகவல் கிடைத்தது.

 

முன்னதாக பாதிக்கப்பட்டவரின் தந்தையும் தனது மகன் காணாமல் போனதாகவும்,

கழிவுநீர் தொட்டியில் உள்ள மேன்ஹோலில் விழுந்துவிட்டதாக நம்பப்படுவதாகவும் தெரிவித்தார்.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் ஆய்வு நடத்தி, மாலை 6.55 மணிக்கு பாதிக்கப்பட்டவரைத் தேடத் தொடங்கினர்.

மாலை 7 மணிக்கு சாக்கடையில் மிதந்த பாதிக்கப்பட்டவரின் உடலைக் கண்டனர்.

மீட்கப்பட்ட சிறுவனின் உடல் சுகாதார அமைச்சின் மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிறுவன் இறந்துவிட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset