நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய இந்திய மக்களின் குரலாக மஇகா தொடர்ந்து விளங்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

மலேசிய இந்திய மக்களின் குரலாக மஇகா தொடர்ந்து விளங்கும்.

அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.

கடந்த 1946-ஆம் ஆண்டு இந்தியர்களுக்காக நிறுவப்பட்ட மஇகா இன்று 79ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைப்பதில் பெருமிதம் கொள்வோம்.

மலேசிய இந்திய மக்களின் குரலாகவும், உரிமைகளை பாதுகாப்பதிலும் தொடர்ந்து நம் பங்களிப்பை நாம் செய்து வருகிறோம்.

சமூகம், கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்கு தொடர்ந்து முன்னிறுத்துவதில் நம் மஇகா முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த அரசியல் கட்சியின் நீண்ட வரலாற்றையும், அது இந்திய சமூகத்திற்கு செய்த பங்களிப்பையும் நினைவுகூற வேண்டிய தருணம் இது.

சாதனை நமது கையிலே

சத்திரம் படைப்போம் நாட்டிலே சோதனை ஆயிரம் வந்தாலும்

தொடர்ந்தே நாமே முன்னேறுவோம்.

என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தமது சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset