நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

5 போர்களை நிறுத்தியதாக  டிரம்ப் தம்பட்டம்

புது டெல்லி:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா - பாகிஸ்தான் உள்பட ஐந்து போர்களை நிறுத்தியதாக தம்பட்டம் அடித்து கொண்டுள்ளார்.

ட்ரூத் எனப்படும் சமூக வலைத்தளத்தில் அவர் செய்துள்ள பதிவில், உலகில் ஐந்து போர்களை நிறுத்தியிருக்கிறேன், இதில் 31 ஆண்டுகளாக நீடித்து வரும் காங்கோ - ரூவாண்டா நாடுகளுக்கு இடையேயான போரும் அடங்கும். இந்த போரில் மட்டும் இதுவரை 70 லட்சம் பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள மாட்டோம் என்று கூறிவிட்டேன். உடனடியாக அனைவரும் போரை நிறுத்தி விட்டார்கள் என்றும் இதன் மூலம் பல லட்சக்கணக்கான உயிர்களை நான் காப்பாற்றியிருக்கிறேன் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset