நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிலியில் சரிந்து விழுந்த சுரங்கம்: 5 ஊழியர்கள் மரணம்

சாண்டியாகோ:

சிலியில் சுரங்கம் சரிந்து விழுந்ததில் 5 ஊழியர்கள் மாண்டனர்.

சுரங்கம் சரிந்து விழுந்த சில நாள்களுக்குப் பிறகே இறுதி ஊழியரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்று (3 ஆகஸ்ட்) தேடல், மீட்புப் பணிகள் நிறைவடைந்தன.

சென்ற வியாழக்கிழமை (31 ஜூலை) சுரங்கம் சரிந்து விழுந்தது.

5 ஊழியர்கள் அதில் சிக்கிக்கொண்டனர்.

சுரங்கம் திடீரென சரிந்து விழுந்ததற்கு நிலநடுக்கம் அல்லது துளையிடும் பணிகள் காரணமா என்பதை ஆராய விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

சிலி அரசாங்கத்திற்குச் சொந்தமான சுரங்க நிறுவனம் Codelco, El Tenienteஐ செயல்படுத்துகிறது. அது 4,500 கிலோமீட்டருக்கு மேல் நீளமுள்ள சுரங்கங்களைக் கொண்டுள்ளது.

ஆதாரம்: AFP

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset